வவுனியாவில் முதிரைக் கடத்தல் முறியடிப்பு: இருவர் கைது

Report Print Theesan in சமூகம்
66Shares

வவுனியா- ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அப்பகுதிக்கு சென்ற விஷேட அதிரடிப்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

இதன்போது மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 7 பெரிய மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தி சென்ற இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்திய கப் ரக வாகனத்தையும், மரக்குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைப்பற்றபட்ட முதிரை குற்றிகளும், கைது செய்யப்பட்டவர்களும் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.