களுத்துறையின் 3 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுகிறதா? வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்
246Shares

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை நீக்கப்படாது என புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பேருவளை, பயாகல மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இது தொடர்பான புதிய அறிவித்தல் இன்று மாலை 6.35 மணியளவில் ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாட்டில் மினுவாங்கொட கொரோனா கொத்தணியின் முதல் கொரோனா தொற்றாளரொருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.