இத்தாலியில் வீடொன்றில் இறந்து கிடந்த 38 வயதான இலங்கை பெண்

Report Print Steephen Steephen in சமூகம்
382Shares

இத்தாலியின் நாபோலி நகரில் சனினா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இறந்து கிடந்த இலங்கை பெண்ணொருவரின் உடலை தாம் நேற்று மீட்டதாக நாபோலி கெரிப்னேரி பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தாலியில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்த பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண் வசித்து வந்த சனினா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வழங்கிய தகவலுக்கு அங்கு சென்ற பொலிஸார் உடலை மீட்டுள்ளனர்.

இந்த பெண் உயிரிழந்த காரணத்தை கண்டுபிடிப்பதற்காக பிரேதப் பரிசோதனை மற்றும் PCR பரிசோதனை என்பவற்றை நடத்துவதற்காக சடலம் நாபோலி சன் பாவோலோ பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் போது நாபோலி நகரில் வசித்து வந்த பல இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால், இந்த பெண் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்திருக்கலாமா என்பதை கண்டறிய மரணத்திற்கு பின்னரான பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.