களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்
265Shares

களுபோவில போதனா வைத்தியசாலையில் சேவையாற்றும் சுகாதார ஊழியர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிப்பதில் சம்பந்தப்பட்ட 12 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையின் சில விடுதிகளில் நேற்று கிருமி நாசனி தெளிக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்டதாகவும் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 3,803ஆக பதிவாகியுள்ள அதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.