கந்தளாய் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் விளக்கமறியலில்

Report Print Mubarak in சமூகம்
67Shares

வாகன திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கந்தளாய் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.

சபுகஸ்தென்ன, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பகுதியில் வாகனங்களை திருடி விற்பனை செய்தமை, ஆள் கடத்தியமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கந்தளாய் ஜயந்திர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைமறைவாக இருந்த நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம், தலைக்கவசம் இல்லாது மோட்டார்சைக்கிள் செலுத்திய வேளை பொலிஸாரால் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் மேற்கொண்ட போதே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தலைமறைவாக இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.