வவுனியாவில் ஜனாதிபதியின் விசேட வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு

Report Print Theesan in சமூகம்
154Shares

ஜனாதிபதியின் விசேட வீடமைப்பு திட்டமான 'உங்களிற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' எனும் தொனிப்பொருளில் வவுனியா, கருப்பனிச்சங்குளம் கிராமவாசி ஒருவருக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டினை வவுனியா தேசிய வீடமைப்பு திட்ட மாவட்ட அதிகாரி குரூஸினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

வவுனியா தேசிய வீடமைப்பு திட்ட மாவட்ட அதிகாரி குரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உங்களிற்கு ஒரு வீடு நாட்டிற்கு எதிர்காலம் வீட்டுத்திட்டத்தின் நாட்டின் பல பாகங்களிலும் பொதுமக்களுக்கு வீடுகளை அரசாங்கம் அமைத்துக் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.