வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை 27 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 இருவர் அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 83 பேரிடம் சோதனை நடத்தப்பட்ட சோதனையில் வெளியாகி முடிவுகளில் 7 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், இன்று அதன் மிகுதி முடிவுகள் வெளியாகின.

அதில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வகையில் வவுனியா வடக்கு வீதி அபிவிருத்தி பணியாளர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய பலரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சென்றதாக கருதப்படும் வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் இன்று மதியம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை வவுனியா மாவட்ட சுகாதார துறையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.