இலங்கையில் பதிவாகியுள்ள 16ஆவது கொரோனா மரணம்

Report Print Tamilini in சமூகம்

கடந்த சில நாட்களாக இலங்கையில் சடுதியாக அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய இலங்கையில் 16வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 23 ஆம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்த வாரத்தில் இலங்கையில் பதிவான 3ஆவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.