நீரில் மூழ்கி பேராதெனிய பல்கலைக்கழக மாணவன் பலி

Report Print Banu in சமூகம்

பலாங்கொட , பால்துவ ஆற்றில் உள்ள 'அலியா வடுனா வாலா பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பலாங்கொட - கிரிமதின்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த மாணவன் தனது நண்பர்களுடன் பால்துவ ஆற்றுக்கு குளிக்கச் சென்ற போதே இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொட ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.