இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி

Report Print Kamel Kamel in சமூகம்
3380Shares

இலங்கையில் பிறந்து ஆறு மாதங்களே ஆன சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த சிசுவே இலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி என ராகம வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஆறு மாத சிசுவிற்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையின் போது குறித்த சிசுவிற்கு கொவிட்-19 நோய் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிசுவிற்கு மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்காக அந்த சிசு முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சிசுவின் தந்தை பெஹலியகொட கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

You may like this video