ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடை

Report Print Kamel Kamel in சமூகம்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீட்டு ஆட்டமோ அல்லது வேறும் குழுவாக இணைந்து விளையாட்டுக்களில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை இன்று அறிவித்துள்ளார்.

நாட்டின் 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாபிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பில் 15 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறையில் 3 பொலிஸ் பிரிவுகளிலும், வெள்ளம்பிட்டி, கொதடுவ, முல்லேரியா, வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சட்டத்தை மீறிச் செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீட்டு ஆடுதல் மற்றும் ஏனைய குழுவாக இணைந்து மேற்கொள்ளப்படும் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், அயலவர்கள் ஒன்றாக குழுமுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.