வவுனியாவில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இ.போ.சபை பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மெலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஓமந்தை நோக்கி டிப்பர் வாகனம் பயணித்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா, நகரசபை வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் டிப்பர் வாகனம் திடீரென தனது வேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை நிறுத்திய போது டிப்பருக்கு பின்பக்கமாக கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்து, டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.