புளுமெண்டால் சங்காவின் மனைவியும் மகனும் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

திட்டமிடப்பட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள புளுமெண்டால் சங்கா என்பரின் மனைவியும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாஎல பகுதியில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்களிடம் இருந்து 2 மில்லியன் ரூபா பணமும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சங்காவின் மனைவி அண்மையில் சுமார் 8 இலட்சம் ரூபாவை வங்கியில் இருந்து மீளப்பெற்று சங்காவிடம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த சங்கா தற்போது நாட்டில் இருந்து தப்பிச்சென்று வேறு நாட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.