மூன்று முகாம்களின் அதிரடிப்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Report Print Ajith Ajith in சமூகம்

சிறப்பு அதிரடிப்படையினர் மத்தியில் கொரோனா தொற்று பரவலை அடுத்து மூன்று முகாம்களின் அதிரடிப்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை சிறப்பு அதிரடிப்படையினரின் பொறுப்பதிகாரி வருண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். சிறப்பு அதிரடிப்படையினரின் முக்கியஸ்தர்கள் பாதுகாப்புப் பிரிவினர் மத்தியிலேயே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை களனி, ராஜகிரிய மற்றும் களுபோவில ஆகிய சிறப்பு அதிரடிப்படை முகாம்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் குறைந்தது 10 பேர் வரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொள்வனவுக்காக சென்ற நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.