கத்திக்குத்துக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தாயொருவர் பலி!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவருடன் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நிதி நிறுவனத்துக்குள் உட்புகுந்து கத்தியால் குத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயான ஹொரவ்பொத்தான- 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.