பாரியளவில் நாடு முழுவதும் பரவியுள்ள இரண்டு இணைப்புக்களின் கொரோனா தொற்று

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டறியப்படுகின்ற கொரோனா தொற்றாளிகள்,பேலியகொட மீன் சந்தை மற்றும் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலேயே கண்டறியப்படுவதாக தொற்று நோயியல் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுதத்சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் இன்று நோயாளிகள் சமூக மட்டத்தில் இருந்து கண்டறியப்படவில்லை என்று அவர் இன்று ஊடகவியலாளர் மத்தியில் தெரிவித்துள்ளார்.

சமூக மட்டத்தில் இருந்து நோயாளிகள் கண்டறியப்படுவார்களானால் அது இரண்டு தொற்று இணைப்புகளில் இன்றி நோயாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இலங்கையில் கண்டறியப்படும் அனைத்து தொற்றாளிகளும் இரண்டு பிரதான தொற்றுக்களின் இணைப்பிலேயே கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு இணைப்புக்களும் பாரியளவில் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளன என்றும் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

You may like this video