பாணந்துறை மற்றும் களுத்துறை நீதிமன்றங்களின் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க சட்டத்தரணிகள் தீர்மானம்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாணந்துறை மற்றும் களுத்துறை நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

இன்று முதல் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் பாணந்துறை கிளை அறிவித்துள்ளது.

கடந்த 16ம் திகதியன்று நீதிமன்றத்துக்கு வந்து சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை சட்டத்தரணிகள் சம்மேளனமும், தமது நீதிமன்ற செயற்பாடுகளை இன்று முதல் நவம்பர் 6ம் திகதி வரை இடை நிறுத்தியுள்ளது.

தமது நீதிமன்றத்துக்கு வந்து சென்ற ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமையை அடுத்தே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக களுத்துறை சட்டத்தரணிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.