மட்டக்களப்பில் 50 பொலிஸாருக்கு முதற்கட்டமாக பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் 50 பேருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் அரச அலுவலகங்கள் ,திணைக்களங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களில் நேரடியாக பொது மக்களுடன் கடமை நிமித்தம் தொடர்புடையவர்களுக்கு பீ. சி. ஆர் பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பீ. சி. ஆர் பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஜி .உதயகுமார் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. கே ஹெட்டிஹாராச்சி தலைமையில், மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் முதற்கட்டமாக சுமார் 50 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.