கம்பஹா மாவட்டத்திற்கு கடுமையாக்கப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

Report Print Tamilini in சமூகம்

கடந்த சில நாட்களாக கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் மக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இன்று காலை ஊரடங்கு நேரம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் சுகாதார முறைமையைப் பின்பற்றாது குவிந்ததனால் அண்மை நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் பல மடங்காக அதிகரித்து விடும் என்ற அச்சம் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இவ்வாறு ஒன்றுகூடிய மக்களால் மீண்டும் கடுமையான ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

You may like this video