வவுனியா நகரில் தனியார் பேருந்தின் நடத்துனர், சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து - வலஸ்முல்ல நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்தினர் மீது வவுனியா நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து மாலை பயணித்தினை ஆரம்பித்த குறித்த தனியார் பேருந்து நேற்று இரவு 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து 8.20 மணியளவில் நகரின் பூட்சிட்டிக்கு முன்பாக தரிந்து நின்ற சமயத்தில், வேறு வாகனம் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் வாக்குமூலத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் குறித்த பேருந்து 9.40 மணியளவிலேயே அங்கிருந்து பயணிகளுடன் பயணத்தினை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.