கொரோனா பரவல் பகுதிகளில் நிலைமை ஆபத்தாக மாறியுள்ளது! சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்

திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட மிகவும் துரதுஷ்டவசமான நிலைக்குள்ளாகி வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொட துணைப்பரவல் காரணமாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆரம்பம் கண்டுபிடிக்க முடியாத நோயாளர்கள் சிலரும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொட கொரோனா பரவல் இரண்டாம் அலையாக கருதப்படுகின்றது. இந்த நிலைமை மிகவும் துரதிஷ்டவசமான நிலையாகும்.

பேலியகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட துணைப்பரவல் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. அத்துடன் இலங்கையில் ஆரம்ப கட்டத்தை கண்டுபிடிக்க முடியாத நோயாளிகள் சிலர் இதுவரையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நிலைமை மிகவும் ஆபத்தாகியுள்ளது.

மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபை எல்லையின் சில பிரதேசங்களில் சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாார பிரிவுகள் வீழ்ச்சியை நோக்கி செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.