கரைச்சி பிரதேசத்தில் பயனாளிகளிளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டுள்ளம்ன.

குறித்த நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பயனாளிகள் 15 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பி.ஜெயகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அமைச்சரின் வடக்கு மாகாண இணைப்பாளர் பாரதிதாசன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் நந்தகுமார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.