இலங்கையில் சடுதியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

Report Print Murali Murali in சமூகம்

இலங்கைக்குள் மேலும் 261 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 234 பேர் மீனவச் சமூக நெருங்கிய இணைப்புக்களில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8,413ஆக அதிகரித்துள்ளது.

கட்டுக்கடங்காத கொரோனா! - இன்றும் 541 பேர் இலக்கு

இலங்கையில் இன்று 541 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தைத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 413ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 464 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.

மேலதிக செய்தி - ராகேஸ்