திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சமன் தர்சன பாண்டிகோராள இன்று தமது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்க முன்னர் 2013.09.13 தொடக்கம் தென் மாகாண முதலமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமக்கு தமிழ் புரியாது.மக்களது பிரச்சினைகளை மொழிபெயர்ப்பின்றி தாம் விளங்கிக்கொள்வதே சாலச்சிறந்தது.

குறுகிய காலத்தில் தமிழ் மொழியை விளங்கிக்கொள்ள முயற்சிப்பேன். அத்துடன் திருகோணமலை மாவட்டத்தை தேசிய ரீதியில் ஏனைய மாவட்டங்களின் அடைவு மட்டங்களிற்கு கொண்டு வர எனது பதவிக்காலத்தில் முயற்சிப்பேன்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற அவசியமான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான நிதி மூலங்களைப்பெற்று செயற்படுத்தப்படும்.

இதற்கு தமக்கு உதவுவதாக அமைச்சின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி)எம்.ஏ.அனஸ்,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க,தென் மாகாண ஆளுநரின் செயலாளர் திலேக்கா குடாச்சி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்)எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், கிளைத்தலைவர்கள், சக உத்தியோகத்தர்கள் ,அரசாங்க அதிபரின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டுள்ளனர்.