யாழ். பருத்தித்துறையிலிருந்து மீன் எடுத்துச் சென்ற கூலர் வாகன சாரதிகளுக்குக் கொரோனா

Report Print Rakesh in சமூகம்

வடக்கிலிருந்து பேலியகொட மீன் சந்தைக்குக் மீன் கொண்டு சென்ற கூலர் வாகனச் சாரதிகள் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் குருநகர், பருதித்தித்துறை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.