முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டம் இப்போதைக்குத் தேவையில்லை! அரசாங்கம் அறிவிப்பு

Report Print Murali Murali in சமூகம்

"கொரோனா வைரஸ் தாக்கத்தால் முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது.

பொருளாதாரத்துக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அரசு செயற்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

"கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரதேச மட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை ஏன் முழு நாட்டுக்கும் பிறப்பிக்கக் கூடாது என எதிர்த்தரப்பினர் கேள்வியெழுப்புகின்றார்கள்.

முழு நாட்டுக்கும் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பதால் எவருக்கும் நன்மை கிடையாது. முழு நாட்டையும் முடக்க வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் மீண்டும் முழு நாட்டையும் முடக்கினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும்" - என்றார்.