சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் வவுனியாவில் 38 பேருக்கான நியமனம் வழங்கி வைப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்
52Shares

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் 38 பேருக்கான நியமனங்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் வழங்கி வைத்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகத்தில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டஒரு இலட்சம் பேருக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் பெறுவதற்கு முதல்கட்டமாக 34ஆயிரத்து 818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் பயிலுனர் நியமனக் கடிதங்களை முதல் கட்டத்தில் பெறுவதற்கு வவுனியா மாவட்டத்தில் 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் சிபாரிசுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 38 பேருக்கே இவ்வாறு நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தேசிய பயிலுனர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை ஊடாக பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சிக்காலத்தில் 22,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்பவர்கள் வெவ்வேறு திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டவுள்ளனர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அவரது இணைப்பாளர்கள் மற்றும் நியமனம் பெறுவோர் எனப் பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.