இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,000 கிலோ மஞ்சள் பறிமுதல்

Report Print Ashik in சமூகம்

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பாம்பன் கடல் வழியாக இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டி அடங்கிய 40 மூடைகளை நடுக்கடலில் வைத்து நாட்டு படகுடன் மெரைன் பொலிஸார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

பாம்பன் பாலம் கடல் வழியாக வெளி மாவட்ட படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மண்டபம் மெரைன் ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாம்பன் வடக்கு கடற்கரையில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாம்பன் லைட் ஹவுஸ் அருகே நடுக்கடலில் உரிய பதிவு எண் இல்லாத நாட்டு படகொன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரைன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த படகு தூத்துக்குடியை சேர்ந்தது எனவும், படகில் உள்ள ஆதார் அட்டை பாம்பன் சேதுபதி நகரை சேர்ந்தவர் உடையது எனவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துன் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.