ஊரடங்கு உத்தரவை மீறிய இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை? வெளியாகியுள்ள காணொளி

Report Print Murali Murali in சமூகம்

பொலிஸார், இளைஞர் ஒருவரை தாக்கும் காட்கள் அடங்கிய சிசிடிவி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

காணொளியில் இந்த சம்பவம் கடந்த 24ம் திகதி இடம்பெற்றதாக பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இளைஞர்கள் சிலர் முச்சக்கர வண்டியில் இருந்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இளைஞர்களை கைது செய்ய காவல்துறையினர் முயற்சிப்பதாக தெரிகிறது.

இதன்போது இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், காணொளியின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.