முகக் கவசம் அணிவது தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

முகக் கவசங்கள் அதிக பட்சம் 4 மணித்தியாலங்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பொது சுகாதார சிறப்பு மருத்துவர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார.

4 மணித்தியாலங்களில் பயன்படுத்திய பின்னர் அகற்றப்படும் முகக் கவசத்தை பாதுகாப்பாக அகற்றி குப்பை தொட்டியில் போட வேண்டும். பின்னர் புதிய முகக் கவசம் ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும்.

வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வோர் இந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..

4 மணி நேரத்தின் பின்னர் அகற்றும் முகக் கவசத்தை குப்பை தொட்டியில் போடுங்கள். ஆங்காங்கே போட வேண்டாம். அதன் ஊடாக இந்த கொரோனா வைரஸ் பரவ கூடும்.

முகக் கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கு முழுமையான மூடும் வகையில் அணிவது கட்டயமாகும். முகக் கவசத்தை சரியான வகையில் பயன்படுத்தவில்லை என்றால் கொரோனா தொற்றுள்ள ஒருவரிடம் இருந்து கொரோனா பரவும் ஆபத்து உள்ளது.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் மேலதிகமாக இரண்டு முகக் கவசங்களை கொண்டு செல்வது கட்டாயமாகும். அது உங்கள் சுகாதார பாதுகாப்பிற்கு நல்லது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may like this video