இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் இறப்புகள் - மேலும் இருவர் உயிரிழப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்று பிற்பகல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒருவார காலத்திற்குள் அறுவர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் இன்றைய தினம் மூவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may like this video