கிளிநொச்சியில் பொலிஸாரால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு

Report Print Yathu in சமூகம்

நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி பொலிஸாரினால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் இன்றையதினம் நடைபெற்றுள்ளது.

இதன் போது கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், பொது மக்களை விழிப்பூட்டும் ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர், தலைமை பொலிஸ் நிலைய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.