வவுனியா பொலிஸாரால் விசேட கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா பொலிஸாரால் விசேட கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

அத்துடன் பேருந்து நிலையம் மற்றும் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் என்பவற்றில் கிருமி நீக்கிகள் விசிறும் செயற்பாடும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க மற்றும் பொலிஸார், இளைஞர் சேவைகள் மன்றத்தினர், சுகாதார திணைக்களத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.