சஹ்ரான் வாடகைக்கு எடுத்த பாணந்துறை வீட்டின் உரிமையாளர் ஆணைக்குழுவில் சாட்சியம்

Report Print Ajith Ajith in சமூகம்

தேசிய தௌஹீட் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்ததாக கூறப்படும் பாணந்துறை வீடு ஒன்றின் உரிமையாளர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் நேற்று சாட்சியம் அளித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளர் எஸ்.எம்.இல்ஹாம் என்பவரே ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்துள்ளார்.

மொஹமட் அசாம் முகமது முபாரகாத் என்பவர் ஒரு மாதம் ஒன்றுக்கு 40,000 ரூபாவை செலுத்தி தமது வீட்டை வாடகைக்கு பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கிங்ஸ்பரி விருந்தகம் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய மொஹமட் முபாரகாத்கின் புகைப்படம் ஆணைக்குழுவினால் காட்டப்பட்டபோது தமது வீட்டை வாடகைக்கு எடுத்தவர் இவர்தான் என்று வீட்டின் உரிமையாளம் அடையாளம் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.