சப்ரகமுவ மாகாணத்தில் 4393 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

சப்ரகமுவ மாகாணத்தில் இன்றைய தினம் வரை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 82 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 ஆயிரத்து 393 தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் வெளி மாகாணங்களில் கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் உட்பட 380 பேர் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நான்கு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா தடுப்பு குழு இன்று முற்பகல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் கூடிய போதே மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் 48 கொரோனா நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 34 கொரோனா நோயாளர்களும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயிரம் பேரும், கேகாலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 393 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை வைத்தியசாலையில் 72 பேரும், உந்துகொட வைத்தியசாலையில் 62 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் 168 பேரும், காவத்தை ருவன்புர கல்வியியற் கல்லூரியில் 78 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.