தேசிய பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

ஆங்கிலத்தில் வெளியிடப்படும் வாராந்த தேசிய பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்றியுள்ளது உறுதியாகியுள்ளது.

குறித்த பத்திரிகையின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான செய்திகளை சேரிக்கும் ஊடகவியலாளருக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனை ஒன்றில் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அந்த ஊடகவியலாளருக்கு சுகாதார துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனிடையே அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் 3ஆம் திகதி செய்தியாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து செய்தி சேகரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.