கொழும்பில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் என நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 335 பேரில் 237 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் 19 பரவல் தடுப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா தொற்றாளர்களில் 161 பேர் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதுடன் 17 பேர் கொஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

இவர்களை தவிர கிருளப்பனையில் 6 பேரும், பாமன்கடையில் 2 பேரும், முகத்துவாரத்தில் 6 பேரும், மட்டக்குளியில் 21 பேரும், கொட்டாஞ்சேனையில் 4 பேரும், நாரான்ஹென்பிட்டியில் 6 பேரும், வெல்லம்பிட்டியவில் ஒருவரும், மாளிகாவத்தையில் 3 பேரும், கடுவலையில் ஒருவரும், வெள்ளவத்தையில் 5 பேரும், பொரளையில் 3 பேரும், துன்முல்லையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.