கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு நோய் பரவல்! வாழைச்சேனையில் அவசர கூட்டம்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையில் அவசர ஒன்று கூடல் இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற அவசர ஒன்றுகூடலில் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் காணப்படும் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய குப்பைகளை வீட்டு வளவிற்கு வெளியில் வீதியோரமாக பைகளில் தரம் பிரித்து வைக்கும் குப்பைகளை அகற்றுவது என்றும், அது தொடர்பாக மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையினால் மக்களுக்கு கொரோனா மற்றும் டெங்கு பாதுகாப்பு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஒழுங்குகளை ஏற்படுத்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.