நாடாளுமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

கடந்த 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நாடாளுமன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற செய்தியாளர்கள் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

20ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் நடைபெற்ற போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற செய்தியாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தின் செய்தியாளர்களுக்கான நிலையத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள் உடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் இடம் தொடர்பில் தமது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அல்லது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.