திருகோணமலை நீதிமன்றம் விடுத்துள்ள அறிவித்தல்!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளவர்களை தவிர வேறு எந்த நபரும் திறந்த நீதிமன்றத்தினுள் நுழையக்கூடாது என திருகோணமலை நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நீதிமன்ற கட்டளைப்படி பதிவாளரினால் திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்னால் அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தண்டப்பணம் விதிக்கப்படுகின்றன நபராலேயே குறித்த தண்ட பணத்தை செலுத்த முடியும் எனவும், நீதவான் நீதிமன்றங்களில் விளக்கம், விசாரணை புதிய வழக்குகள் தீர்ப்பு கட்டளைக்காக நியமிக்கப்பட்டுள்ள வழக்குகளை தவிர்ந்த ஏனைய அனைத்து வழக்குகளும் கூப்பிடும் வழக்குகளுக்காக எதிரிகளோ / சந்தேக நபர்களோ திறந்த நீதிமன்றத்தினுள் சமூகமளிக்க தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகளில் அடுத்த வழக்கு திகதி பற்றிய அறிவித்தல் வழக்குத் தினத்தன்று காலையிலேயே அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதவான் நீதிமன்றத்திற்கு பிணை ஒப்பம் இடுவதற்காக காட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை பெற்றுக் கொள்வதற்காகவும் வருபவர்கள் 10:30 தொடக்கம் 11:30 வரையான நேரத்தில் மாத்திரம் சமூகமளிக்க முடியுமெனவும் அறிவித்தல் பலகையில் திருகோணமலை நீதிமன்ற கட்டளைப்படி பதிவாளர் அவர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்வறிவித்தல் அமுல்படுத்தப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.