கொரோனா தொற்றுக்குள்ளான 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்
155Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வெளிநாடுகளில் வாழும் 98 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய சவுதி அரேபியாவில் 35 இலங்கையர்கள் உயிரிழந்துள்ள நிலையில் குவைத்தில் 21 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

எமீரகத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும் பிரித்தானியாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் தலா இரண்டு இலங்கையர்களும், பஹ்ரேன், ஜோர்தான், ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இஸ்ரேலில் ஒரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.