வெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வெளியே செல்ல தடை

Report Print Kamel Kamel in சமூகம்
37Shares

பரவிவரும் கொரோனா நோய்த் தொற்று நிலைமை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சிறைச்சாலையில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு சிறைச்சாலையை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை தலைமை அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

தற்பொழுது வீடுகளில் உள்ள சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிறைச்சாலைக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய்த் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.