ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய 19 அதிகாரிகள் இடமாற்றம்

Report Print Steephen Steephen in சமூகம்
122Shares

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் கடமையாற்றி வந்த 19 விசாரணை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், உப பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ட் பதவிகளை வகிக்கும் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அனைவரும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தருணத்தில் இப்படியான விசாரணை அதிகாரிகள் குழுவை இடமாற்றம் செய்யும் தேவை இருக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றன .

அத்துடன், இந்த அதிகாரிகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திலிருந்து இடமாற்றம் செய்து சாதாரண பொலிஸ் சேவையில் ஈடுபடுத்துவது ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைகளுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் இந்த விசாரணைகளை நடத்தி வந்துள்ளனர்.

இதனால், இந்த அதிகாரிகளுக்கே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்த கூடிய அனுபவம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் இந்த அதிகாரிகள் குழு இல்லாமையான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பெரிய தடையாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் இந்த விசாரணை அதிகாரிகளின் இடமாற்றமானது பாரிய கேள்விக்குரியது என குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்குள் பேசப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.