கொரோனா எதிர்ப்பு ஊசி மருந்து தொடர்பில் தற்போதே நம்பிக்கை வைக்க முடியாது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்
68Shares

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்கான ஊசி மருந்து தொடர்பாக பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் தற்போது வரை ஊசி மருந்து குறித்து 100 வீதம் நம்பிக்கை கொள்ள முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான ஊசி மருந்து வெற்றிகரமாக கண்டறியப்பட்டாலும் அது இலங்கைக்கு வர 2021 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரையான காலம் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு கூட்டு நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்ததன் பிரதிபலனாக 90 சத வீதம் வெற்றியளிக்க கூடிய ஊசி மருந்து பற்றியே தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் விசேட அனுமதிக்காக இந்த ஊசி மருந்தை சமர்ப்பிக்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அவசர அனுமதியாக டிசம்பர் மாத ஆரம்பத்தில் இந்த ஊசி மருந்துக்கு அனுமதி கிடைக்கும் என்று நினைத்தாலும் இதனையடுத்து ஊசி மருந்தை தயாரிக்க வேண்டும்.

அப்போது ஒரு தொகை ஊசி மருந்தை தயாரித்து முடிக்க மூன்று அல்லது ஆறு மாதங்கள் செல்லும். குறிப்பிட்டளவு ஊசி மருந்துகள் மாத்திரமே முதலில் தயாரிக்கப்படும் என்பதே இதில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை. சிறிய தொகை ஊசி மருந்தை பெற்றுக்கொள்ள மிகப் பெரிய போட்டி ஏற்படும்.

உலக சுகாதார அமைப்பு சரியான தலையீடுகளை செய்யவில்லை என்றால் எமது நாடு போன்ற நாடுகளுக்கு இந்த ஊசி மருந்து கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அந்த நிறுவனம் கூறுவது போல் இந்த இறுதிக்குள் உலகம் முழுவதும் வழங்க 50 மில்லியன் ஊசி மருந்துகளை மாத்திரமே தயாரிக்க முடியும்.

இதில் 30 மில்லியன் ஊசி மருந்துகளை இங்கிலாந்து கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ளது. இதன் பின்னர் முழு உலகத்திற்கும் 20 மில்லியன் ஊசி மருந்துகளே எஞ்சும். தற்போது கிடைத்துள்ள மருத்துவ தகவல்களுக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்றி இருந்து தற்காத்துக்கொள்ள இரண்டு ஊசி மருந்துகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஊசி மருந்தை செலுத்திய பின்னர் ஒரு வாரத்திற்குள் 90 வீத பாதுகாப்பு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

கிடைக்கும் பாதுகாப்பு எவ்வளவு காலத்திற்கு உடலில் இருக்கும் என்பது எமக்கு தெரியாது. அதனை அந்த நிறுவனத்தினாலும் சரியாக கூற முடியவில்லை.

இதன் காரணமாகவே ஊசி மருந்து மீது நம்பிக்கை வைத்து செயற்படக் கூடிய தருணம் இதுவல்ல. ஊசி மருந்து கிடைப்பதற்கு அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வரையான காலம் செல்லும். அதுவரை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் எதனையும் மறக்காது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.