சிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் பிள்ளையானின் சகா..

Report Print Kumar in சமூகம்
913Shares

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், சிஐடியினரால் சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக்கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சாட்சியை அச்சுறுத்தியதாக தெரிவித்து, கொழும்பில் இருந்து வந்த சிஐடி அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னர் குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.