கொரோனா தொற்றாளர்கள் மனநோயால் பாதிக்கப்படும் ஆபத்து - புதிய ஆய்வு

Report Print Steephen Steephen in சமூகம்
96Shares

கொரோனா வைரஸ் தொற்றிய நபர்களில் 5 பேரில் ஒருவர் 90 நாட்களுக்குள் மன நோயினால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நபர்கள் மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அதிக ஆபத்து இருப்பதாக பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் மனநோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிய பின்னர், அந்த நபர்கள் மன நோய்களால் பாதிக்கப்படும் காரணம் மற்றும் சிகிச்சை முறைகளை கண்டறியவது குறித்து உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.