வாழைச்சேனையில் திரவ தொற்று நீக்கி விசிறல்

Report Print Navoj in சமூகம்
25Shares

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பொது இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதி, வியாபார நிலையங்கள், வங்கிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டலில் கோறளைப்பற்று பிரதேச சபையினால் திரவ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.