கொழும்பு நகரில் கொரோனா நோய் காவிகள் - மக்கள் விசேடமான கவனத்துடன் இருக்க வேண்டும்

Report Print Steephen Steephen in சமூகம்
226Shares

கொரோனா வைரஸ் தொற்றிய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொழும்பு நகரில் இருக்கலாம் என கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நகரில் ஆங்காங்கே தெரிவு செய்யப்பட்ட 300 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவர்களில் 5 வீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது.

இதனடிப்படையில் கொழும்பு நகரில் வசிக்கும் 6 லட்சம் மக்களின் 5 வீதமானவர்கள் கொரோனா தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர் விஜேமுனி கூறியுள்ளார்.

கொரோனா தொற்றாளர்களில் 80 வீதமானவர்களுக்கு எந்த நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை எனினும் அவர்கள் நோய் காவிகளாக இருப்பார்கள். 5 வீதமானவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை.

இவ்வாறு நோய் அறிகுறிகள் தென்படாத நபர்களில் சுமார் 0.4 வீதமானவர்களே சுகவீனமுற்று இறக்கின்றனர். இந்த நிலையில் நோய் அறிகுறிகள் இன்றி எவரது உடலிலும் கொரோனா வைரஸ் இருக்கலாம். இதனால் கொழும்பு நகரில் நடமாடும் மக்கள் விசேடமான கவனத்துடன் இருக்க வேண்டும்.

தற்போது அடையாளம் காணப்படும் நோயாளிகள் காணப்படும் நிலைமையானது கடலில் இருக்கும் பனிப்பாறையில் உச்சி போன்றது. வெளியில் தென்படும் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இருக்கலாம் என்பதை மறந்து விடக் கூடாது எனவும் மருத்துவர் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.