நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Kamel Kamel in சமூகம்
126Shares

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 227 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் 15,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பெஹலியகொட மற்றும் மினுவாங்கொட கொவிட் கொத்தணியானது பன்னிரெண்டாயிரத்தை கடந்துள்ளது.

இதேவேளை, கொவிட் காரணமாக நாட்டில் இதுவரையில் 48 பேர் உயிரிழந்துள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.