மன்னார் - குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் கஞ்சா பொதிகள் மீட்பு - இருவர் கைது

Report Print Ashik in சமூகம்
43Shares

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் வைத்து கார் ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குஞ்சுக்குளம் சந்தியில் உள்ள பொலிஸ் மற்றும் இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து நேற்று இரவு குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 486 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் , உப பொலிஸ் அதிகாரி அளுத்கமகே, மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச, உப பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார தலைமையிலான அகுழுவினர் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த வாகனத்தில் பயணித்த வரகாபொல பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 42 வயதுடைய இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைகளின் பின்னர் மடு பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.